இலங்­கைக்கு பெரு­ம­ளவு கடன்­களை வழங்­கி­யுள்ள சீனாவின் ஏற்­று­மதி- இறக்­கு­மதி வங்கியின் (எக்சிம் வங்கி) உயர்­மட்டக் குழு­வொன்று அடுத்­த­வாரம் இலங்கை வர­ வுள்­ளது.

சீன எக்சிம் வங்­கியின் சலு­கைக்­கடன் திணைக்­க­ளத்தின் பிரதி பொது முகா­மை­யாளர் லி டான் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் இந் தக் குழுவில் இடம்­பெ­ற­வுள்­ளனர்.

அடுத்த ஆண்­டுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதி தொடர்­பான மதிப்­பீ­டு­களைச் செய்­யவே இந்தக் குழு இலங்கை வர­வுள்­ளது.

சீனாவின் எக்சிம் வங்கி ஏற்­க­னவே இலங்­கையில் பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு கடன்­களை வழங்­கி­யுள்­ளது. குறிப்­பாக, அம்­பாந் ­தோட்டை துறை­முகம்,  நுரைச்­சோலை அன ல்மின் நிலையம், மத்­தள விமான நிலையம் ஆகிய திட்­டங்­க­ளுக்கு சீன எக்சிம் வங்­கியே கடன்­களை வழங்­கி­யது.

நெடுஞ்­சா­லைகள், நீர்ப்­பா­சனம், வடி­கா­ல­மைப்பு உள்­ளிட்ட உட்­கட்­ட­மைப்புத் திட்­டங்­க­ளுக்கு மேலும் நிதி உத­வி­களைப் பெற்றுக் கொள்­வது தொடர்பாக இலங்கை வரவுள்ள சீன எக்சிம் வங்கிக் குழுவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.