முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அடுத்­த­வாரம் சீனா­வுக்கு மேற்­கொள் ளத் திட்­ட­மிட்­டி­ருந்த பய­ணத்தை திடீ­ரென இரத்துச் செய்­தி­ருப்­ப­தாக தக­வல் கள் தெரி­விக்­கின்­றன.

சீனாவின் குவான்சோ நகரில் நடக்கும் கண்­காட்சி ஒன்றில் பங்­கேற்­ப­தற்­காக, எதிர்­வரும் 21 ஆம் திகதி மகிந்த ராஜ­பக்ச சீனா செல்­ல­வி­ருந்தார். அவர் எதிர்­வ­வரும் 23 ஆம் திகதி வரை அங்கு தங்­கி­யி­ருக்­கவும் திட்­ட­மிட்­டி­ருந்தார்.

குவான்டொங் மாகாண ஆளுனர் மா ஷிங்­ரூயின் அழைப்பின் பேரி­லேயே மகிந்த ராஜ­பக்­சவின் இந்தப் பயணம் இடம்­பெ­ற­வி­ருந்­தது.

அடுத்­த­மாதம் மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடக்கும் பௌத்த மத நிகழ்வு ஒன்றில் பங்­கேற்க மகிந்த ராஜ­பக்ச, இந்­தியா செல்­ல­வி­ருந்தார். இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் பின்­ன­ணி­யு­ட­னேயே இந்த நிகழ்­வுக்கு அவர் அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்தப் பய­ணத்தின் போது, மகிந்த ராஜ­பக்­ச­வுடன், புது­டெல்லி பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்த நிலையில், சீன அர­சாங்கம், குவான்டொங் ஆளுனர் மூலம், அழைப்பை அனுப்­பி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்து, இந்­தியப் பய­ணத்­துக்கு முன்னர், சீனப் பய­ணத்தை மேற்­கொள்ள மகிந்த ராஜ­பக்ச திட்­ட­மிட்­டி­ருந்தார்.

இது இந்­தி­யா­வுக்கு எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே, சீனப் பயணத்தை மகிந்த ராஜபக்ச திடீரென கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.