20 ஆவது திருத்தம் இல்­லையேல் டிசம்பர் 9 ஆம் திகதி தேர்தல்

Published By: Robert

18 Sep, 2017 | 08:43 AM
image

மாகாண சபை தேர்­தலை ஒரே­மு­றையில் நடத்­து­வ­தற்­கான இரு­ப­தா­வது திருத்தம் தொடர்­பான விட­யத்தில் உயர் நீதி­மன்றின் தீர்ப்பை கவ­னத்தில் கொண்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வதா அல்­லது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் அதனை நிறை­வேற்­று­வதா என்­பதை பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்­லா­விட்டால் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மாகாண சபை தேர்­தலை கட்­டா­ய­மாக  நடத்த வேண்டும் என்று சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். 

Image result for டிசம்பர் 9 ஆம் திகதி தேர்தல் virakesari

கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே  சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இதனை தெரி­வித்தார். 

இது­கு­றித்து அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

அண்­மையில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இடம்­பெ­றுமா ? இல்­லையா ? என்­பது எமக்கு தெரி­யாது. இந்த விடயம் தொடர்பில் உயர் நீதி­மன்றில் விவா­தமும் இடம்­பெற்­றது. இதன் தீர்ப்பு சபா­நா­ய­க­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தேவை­யில்லை மூன்றில் இரண்டு போது­மா­னது என பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டால், மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்­பெ­றாது. 

ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டால் நிச்­ச­ய­மாக தேர்தல் ஒன்­றுக்கு செல்ல வேண்டும். ஒக்­டோபர் 2 ஆம் திகதி வேட்­பு­மனு கோரப்­பட்டு எவ்­வி­த­மான மாற்­றமும் இன்றி தேர்­தலை நடத்த வேண்டும்.  டிசெம்பர் 9 ஆம் திகதி தேர்­தலை நடத்­தியே ஆக வேண்டும். ஏனென்றால் இந்த சட்­ட­மூ­லத்தில் சனிக்­கி­ழமை தேர்தல் நடத்த வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் டிசெம்பர் மாதம்  02, 09 மற்றும் 16 ஆகிய திக­திகள் காணப்­ப­டு­கின்­றன. 1 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மிலாது நபியின் பிறந்த தின நிகழ்வை முஸ்­லிம்கள் கொண்­டா­டு­கின்­றனர். 3ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை போயா தின­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 16 ஆம் திகதி கல்வி பொது­த­ரா­தர சாதா­ரண பரீட்­சையின் ஆரம்­பித்து விடும். அன்றும் பரீட்­சைகள் இடம்­பெறும். 9 ஆம் திக­தி­யி­லி­ருந்து பரீட்­சைகள் ஆணை­யாளர் நாட்டில் உள்ள பாட­சா­லை­களை பரீட்சை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கேட்­டுள்ளார். 

எனவே தேர்­த­லுக்­காக நாட்டில் உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளையும் எம்மால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தது போன்று, மாகாண சபை தேர்­த­லையும் ஒத்­தி­வைக்க முடி­யாது. உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­புக்கு இணங்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்றால் 20 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது முடியாத காரியம். எனவே டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி கட்டாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுவே சட்ட நிலைமைகள் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08