வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா நோக்கி  வந்த பஸ்ஸில் மாணவியிடம் சேட்டை புரிந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

குருணாகல் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு வந்த பஸ்ஸில் விடுமுறையிற்கு வீடு சென்ற கலாபோகஸ்வவே இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவச்சிப்பாய் ஒருவர் பயணித்து கொண்டிருந்தார்.

குறித்த பஸ்ஸில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மாணவி மீது இராணுவச்சிப்பாய் திடீரென சேட்டை புரிந்துள்ளார்.

மாணவி போட்ட கூச்சல் சத்தத்தையடுத்து குறித்த இராணுவச்சிப்பாயை பஸ்ஸில் பயணம் மேற்கொண்டவர்களின் உதவியுடன் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.