முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்று நாள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி சீனாவுக்குச் செல்லவுள்ளார். 

அங்கு இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே, அவர் சீனாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மஹிந்த சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீன விஜயம் முடிவடைந்த பின்னர், இந்தியா - மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெறும் பௌத்த நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவுக்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.