கொழும்பு, கிராண்ட்பாஸ் மற்றும் புறக்கோட்டைப் பகுதிகளில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இரு நபர்களிடமிருந்தும் 17 கிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றுக்கொண்ட 44 ஆயிரம் ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட 28 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் ஆரம்பகட்ட விசாரணைகளை நடாத்தியதன் பின்னர் நாளை மறுநாள் கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.