மட்டக்களப்பில் ஐந்து வயதிற்கு உட்பட்ட 53 வீதமான பிள்ளைகள் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரந்தான் தெரிவித்தார்.

கல்குடா எரிசாராய தொழிற்சாலை தொடர்பான விழிப்புணரவு கூட்டம்  நேற்று முன்தினம் மட்டக்களப்பு கோப் மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்த கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரிசி மூலமாக கிடைக்கும் பண்டங்களைத்தான் மட்டக்களப்பு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே ஏழை மக்களுக்கு இவை இலகுவாக கிடைப்பதற்கான நடவடிக்கையை ஏற்படுத்த வேண்டிய சூழல் எமக்கு இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 53 வீதமான 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் மந்தபோசணையால் பாதிக்கப்படுள்ளனர். ஏனைய மாவட்டங்களில் உள்ள பிள்ளைகளை விட அதிகமானவர்கள் இங்குதான் இருக்கின்றனர்.

எரிசாராயத்துக்கு நீர் மிகவும் முக்கியம் அதனால் தான் மட்டக்களப்பை தேர்ந்து தொழிற்சாலையை இங்கு நிர்மாணிக்கின்றனர்.

இதற்கு மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூக வல்லுநர்களும் உதவிசெய்கின்றனர். இவர்கள் மக்கள் நலன்சார்ந்து செயற்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.