திருகோணமலையிலுள்ள பௌத்த குருமார்களும் பௌத்த மக்களும் ஒன்றிணைந்து நகரின் மணிக்கூட்டு கோபுர சந்திக்கருகில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பௌத்த குருமார்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை மற்றும் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சாட்சியம் அளிக்க தயார் என அமைச்சர்  சரத்பொன்சேகா கூறியமை போன்ற காரணங்களுக்காகவே குறித்த ஆர்ப்பாட்டத்தை அப் பகுதி மக்கள் மேற்கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ரஞ்சன் ராமநாயக்கவினதும் சரத் பொன்சேகாவினதும் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.