பொரளை, வனாதமுல்லை, லெஸ்லி ரனகல பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொலை செய்யப்பட்ட இளைஞர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்துன் தாரிக லக்ஷிக என இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை இனந்தெரியாத இருவர் வெட்டியுள்ளதாகவும், வெட்டுக்காயங்களுக்குள்ளான இளைஞர் அவ்விடத்திலேயே விழுந்துள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெட்டுக்காயங்களுக்குள்ளாகி விழுந்து கிடந்த குறித்த இளைஞரை அப்பகுதி மக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளிலோ அல்லது கடத்தல் செயற்பாடுகளிலோ தொடர்புபட்டவர் என்பதற்கான எவ்வித பதிவுகளும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த கொலை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.