ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள் ளும் நோக்கில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்கா செல்­ல­வுள்ளார்.  

இந்த விஜ­யத்­தின்­போது ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ்  இந்­திய பிர­தமர்   நரேந்­திர மோடி  ஜப்பான் பிர­தமர்  சின்­சிரோ அபே சீன ஜனா­தி­பதி  ஷீ ஜின்பின்  ஜேர்மன் அதிபர்  ஏஞ்­சலா மேர்கல் கன­டாவின் பிர­தமர்  டுருடூ உள்­ளிட்ட  அர­சியல் தலை­வர்­களை சந்­தித்து பேச்சு நடத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.   இவர்­க­ளு­ட­னான சந்­திப்­புக்கள் இது­வரை உறு­தி­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யா­யினும்     சந்­திப்­புக்கள் நடை­பெறும் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

மேலும் பாகிஸ்தான் மற்றும் நேபாளம்  ஆகிய நாடு­களின் பிர­த­மர்­களை  சந்­திப்­ப­தா­னது தற்­போது உறு­தி­யா­கி­யுள்­ளது.  ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின்   பக்க சந்­திப்­புக்­க­ளா­கவே அர­சியல் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான இந்த சந்­திப்­புக்கள் நடை­பெ­று­வுள்­ளன. 

ஐக்­கிய நாடுகள்  செய­லாளர்  அன்­டோ­னியோ கட்­ர­ஸு­டனும் ஜனா­தி­பதி   மைத்­தி­ரி­பால சிறி­சேன  பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன்  ஐக்­கிய நாடுகள் சபை­யுடன்   இணைந்து பய­ணிப்­பது குறித்து  ஆரா­ய­வுள்ளார். அத்­துடன்  இலங்­கையில்  ஐக்­கிய நாடுகள் சபை முன்­னெ­டுக்கும் அபி­வி­ருத்தி  உதவி  திட்­டங்கள்   தொடர்­பா­கவும் பேசப்­ப­ட­வுள்­ளது.   ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர்  அரச தலை­வர்­க­ளுக்கு வழங்கும்  மதி­போ­சன  விருந்­து­ப­சா­ரத்­திலும் பங்­கேற்பார். 

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன   எதிர்­வரும் 19 ஆம் திகதி  செவ்­வாய்க்­கி­ழமை    பொதுச் சபையில் உரை­யாற்­ற­வுள்ளார். 

இந்த உரை­யின்­போது  அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும்  வேலைத்­திட்­டங்கள்  போன்­றவை தொடர்­பாக  உல­க­நா­டு­களின் தலை­வர்­க­ளுக்கு  விளக்­க­ம­ளிக்­க­வி­ருக்­கிறார்.  

மேலும்   முதற்­த­ட­வை­யாக  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பை  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.     உலக நாடுகளின் அரச தலைவர்களுக்கு  அமெரிக்க ஜனாதிபதி  வழங்கும்    இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி  பங்கேற்பார்.