இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழு தலைவராக  இலங்கை அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் கிரகம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை அணி கலந்து கொண்ட போட்டி தொடர்களில்  தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று சனத் ஜெயசூரிய தலைமையிலான இலங்கை தெரிவுக் குழு அங்கத்தினர்கள் அனைவரும் இராஜினாமா செய்தனர்.

இதைதொடர்ந்து  இலங்கை கிரிக்கெட் சபை குறித்த முடிவினை அறிவித்துள்ளது. கிரகம் லெப்ரோய் இலங்கை அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 44 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

மேலும் கிரகம் லெப்ரோய் சர்வதேச போட்டி நடுவராகவும் செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.