எயார் வைஸ் மார்ஷல் ஏ.பி. சொசா (ஓய்வு) மற்றும் விங் கொமாண்டர் எஸ்.ஆர். ரத்னபால (ஓய்வு)ஆகியோர் எழுதிய "தியத்தலாவ விமானப்படை தளத்தின் வரலாறு மற்றும் ரெஜிமென்ட் ” ( "The history of SLAF Diyatalawa and the Regiment" ) என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந் நூல் வெளியீடு நேற்று  26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலமையில் இலங்கை விமானப்படை தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தியதலாவ முகாமின் ஓய்வுபெற்ற கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

நூலின் முதல் பிரதியை எயார் வைஸ் மார்ஷல் ஏ.பி. சொசா (ஓய்வு) இலங்கை விமானப்படைத்தளபதி எயார்  மார்ஷல் ககன் புலத்சிங்களவிடம் கையளித்தார்.