மட்டக்களப்பு செங்கலடியில் இனம் காணப்படாத ஒரு வகை மிருகம் ஒன்றினை பழைய செல்லம் தியேட்டர் கட்டிடத்திற்குள்ளிருந்து பொதுமக்கள் பிடித்து வைத்துள்ளனர்.

குறித்த மிருகம் நீர் நாய் போன்று உள்ளதனால் அது குறித்து வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்து அதனை இரவு 7 மணியளவில் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களும் குறித்த விலங்கை அடையாளம் காணமுடியவில்லை என்று கூறி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்ல முயற்சித்தபோது குறித்த விலங்கு அங்கிருந்து தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.