1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விமான தாக்குதலில் உயிரிழந்த 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுபூர்வமாக புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் அனுஷ்ட்டிக்கபட்டது.

வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் முதன்முறையாக இந்த நினைவேந்தல் இந்தவருடம் சிறப்பானமுறையில் ஒழுங்குபடுத்தபட்டு அனுஷ்ட்டிக்கப்பட்டது. 

இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கதறியழுது தமது உறவுகளின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலிகளை செலுத்தினர்.