நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோஸ்போட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், பாடசாலையின் களஞ்சியசாலை, பிரதான காரியாலயம், சிற்றுண்டிச்சாலை மற்றும் அருகிலுள்ள சிறுவர் நிலையம் என்பன நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவர் நிலையத்திலுள்ள எரிவாயு  சிலிண்டர்கள் மட்டும் காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள பொலிஸார் இதுவரை சந்தேகத்திற்கிடமான எவரையும் கண்டுப்பிடிக்கவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.