இந்திய உயர்ஸ்தானிகராலயமும் களனி பல்கலைகழகத்தின் ஹிந்தி மொழிப் பிரிவும் இணைந்து ஹிந்தி தினம் 2017 ஐ முன்னிட்டு ஹிந்தி இணையவழிக்கற்றல் - மாநாடு  கடந்த 13 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இம் மாநாட்டிற்கு இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.ட்ரான்ஜித்,  களனி பல்கலைக்கழக பேராசிரியர் டி.எம் சமரசிங்க மற்றும் பல்கலைக்கழகத்தின் துனை வேந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் உரையற்றிய உயர்ஸ்தானிகர் களனி பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழிக்கு அளித்துள்ள முக்கியத்துவத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும் இன்றைய நவீன உலகில் ஹிந்தி மொழியில் மின் கற்றல் நெறியை வலியுறுத்தியதோடு இந்திய கலாச்சார மையம் முதன் முறையாக வெளியிட்டுள்ள இ - பிரையர்ஸ் பத்திரிக்கையின் முக்கியத்துவம், பயன் என்பவற்றை எடுத்துக் கூறி குறித்த இணைய பத்திரிக்கை உலகம் முழுவதுமுள்ள ஹிந்தி வாசகர்களை எளிதில் இனைக்கும் எனவும் தெரிவித்தார்.

ஹிந்தி மொழிப்புத்தகங்களை சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தக வெயியீடும் இம் மாநாட்டில் இடம்பெற்றது.

இம் மநாட்டிற்கு உயர்ஸ்தானிகர் மற்றும் உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், பௌத்த மத தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இம் மாநாட்டில் ஹிந்தி மொழிப் போட்டிப் பரீட்சைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.