மன்னார் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : கொள்ளையர்கள் கைது - நகைகள்,பணம் மீட்பு

Published By: Robert

27 Jan, 2016 | 11:39 AM
image

மன்னார் எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் ஆசிரியரின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதோடு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

மன்னார் எழுத்தூர் கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் முருங்கன் பாடசாலை ஆசிரியர் நிவீன் பெனாண்டோ (வயது-47) என்பவரது வீட்டினுள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் ஆசிரியர் அவரது மனைவி மற்றும் தந்தை ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கிய பின் அவர்களை கட்டி வைத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் தடயங்களை சாட்சியமாக வைத்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எம்.விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோவின் மேற்பார்வையில், மன்னார் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஆர்.சரத் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸ் குழுவினர் பிரதான சந்தேக நபர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

பிரதான சந்தேக நபர்கள் 3 பேரூம் எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு, புத்தளம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்த மன்னார் பொலிஸார் குறித்த பிரதான சந்தேக நபர்களை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றவர், திருடப்பட்ட நகைகளை விலைக்கு வாங்கியவர்கள் என மேலும் 4 பேரை கைது செய்துள்ளதோடு சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

எனினும் மேலும் ஒரு பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் குறித்த நபரையும் மன்னார் பொலிஸார் தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் புத்தளம் பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையிலே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியரின் வீட்டில் திருடப்பட்ட 11 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்கள் மூவர் உற்பட ஏழு பேரூம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விசாரனைகளின் பின் குறித்த சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஆர்.சரத் மேலும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51