நிராகரித்த ஐக்கிய இராச்சிய பொது மருத்துவ சபையுடன் சைட்டம் பேச்சு

Published By: Devika

15 Sep, 2017 | 11:45 AM
image

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை நிராகரித்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவ சபையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக சைட்டம் தெரிவித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தையின் மூலமாக, தனது மாணவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவ சபையில் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக விண்ணப்பிக்க அனுமதி கோரியே இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சைட்டம் மேலும் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, சைட்டத்துக்கான அங்கீகாரத்தை ஜி.எம்.சி. (General Medical Council) என்று அழைக்கப்படும் இந்நிறுவனம் நிராகரித்திருந்தது.

இது, ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஒரு சுயாதீன நிறுவனமாகும். 

இந்நிறுவனத்தின் அங்கீகாரத்தை வேண்டி சர்வதேச அளவில் பல மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில், பதினொரு மருத்துவக் கல்லூரிகளை தகுதியற்றவையாகக் கருதி மேற்படி நிறுவனம் நிராகரித்துள்ளது.

அந்தப் பதினொரு கல்லூரிகளுள் சைட்டம் கல்லூரியும் ஒன்று. மக்களின் பாதுகாப்பையும், நன்மையையும் உறுதிப்படுத்தும் விதமாகவே மேற்படி பதினொரு கல்லூரிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும், நிராகரிக்கப்பட்டுள்ள இந்தப் பதினொரு கல்லூரிகளிலும் கல்வி கற்கும் மாணவர்கள், ஐக்கிய இராச்சியத்தில் நடத்தப்படும் மருத்துவப் பரீட்சைகளுக்குத் தோற்ற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், ஐக்கிய இராச்சியத்தின் மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஜி.எம்.சி. நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஒவ்வொரு கல்லூரியினதும் செயற்பாடுகளையும் ஏனைய தகவல்களையும் ஆழமாக ஆராய்ந்த பின்னரே இந்தப் பதினொரு கல்லூரிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01