மேற்­கிந்­தியத் தீவுகள் -மற்றும் அயர்­லாந்து அணி­க­ளுக்­கி­டையில் நேற்­று­முன்­தினம் நடை­பெ­ற­வி­ருந்த ஒருநாள் போட்டி மழையின் கார­ண­மாக இரத்து செய்­யப்­பட்­டது. இதனால் இலங்கை 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்கு நேர­டி­யாகத் தகுதி பெறு­வ­தற்­கான வாய்ப்பு சற்று பிர­கா­ச­மா­கி­யுள்­ளது.

இங்­கி­லாந்தில் 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணத் தொடரானது 10 அணிகள் மட்­டுமே போட்­டி­யிடும் வகையில் மாற்றி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

போட்­டியை நடத்தும் இங்­கி­லாந்து தவிர்த்து, 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில், ஒருநாள் தர­வ­ரி­சையில் முதல் 8 இடங்­களில் இருக்கும் பிற அணிகள் உலகக் கிண்­ணத்­திற்கு நேரடித் தகுதி பெறும். மீத­முள்ள இரண்டு இடங்­க­ளுக்கு மற்ற அணிகள் 'தகுதிச்' சுற்றில் விளை­யாடித் தகுதி பெற வேண்டும்.

இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, தென்­னா­பி­ரிக்கா, நியூ­ஸி­லாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் உலகக் கிண்ணத்திற்கு ஏற்­க­னவே நேரடித் தகுதி பெற்­று­விட்­டன. 

செப்­டம்பர் மாதம் 3ஆம் திகதி நிலைவ­ரப்­படி இலங்கை 86 புள்­ளி­க­ளுடன் 8-ஆவது இடத்­திலும், மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் 78 புள்­ளி­க­ளுடன் 9ஆ-வது இடத்­திலும் இருக்­கின்­றன. இங்­கி­லாந்­துக்கு எதி­ரான தொடரின் முடிவில் இலங்­கையைத் தர­வ­ரி­சையில் முந்­தினால் மட்­டுமே மேற்­கிந்­தியத் தீவுகள் அணியால் நேரடித் தகுதி பெற முடியும். 

தற்­போது அயர்­லாந்துடனான போட்டி நடை­பெ­றா­ததால் இங்­கி­லாந்துக்கு எதி­ரான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் முழுமையாக வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.