சில் துணி தொடர்பில் மஹிந்த

Published By: Robert

15 Sep, 2017 | 10:23 AM
image

பெளத்த தர்­மத்தின் வளர்ச்­சிக்கு சில் துணி வழங்­கி­ய­மைக்­கா­கவே லலித் வீர­துங்க மற் றும் அனுஷ பெல்­பிட்ட கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஜனா­தி­பதி விசேட அபி­வி­ருத்தி திட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்­டதே ஒழிய தேர்­தலை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. வாக்கா­ளர்­க­ளுக்கு அன்றி விகா­ரை­க­ளுக்கே சில் துணிகள் பகி­ரப்­பட்­டன. அப்­ப­டி­யெனில் பாட­சாலை சீருடை வழங்­கு­வதின் ஊடாக தேர்தல் பெறு­பே­று­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யுமா? என முன் னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ கேள்வி எழுப்­பினார்.

Image result for சில் துணி தொடர்பில் மஹிந்த

மேலும் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சுய இலா­பத்­திற்­காக அன்றி ஜனா­தி­பதி மற்றும் அமைச்­ச­ர­வையின் உத்­தி­யோ­க­பூர்வ உத்­த­ர­வினை அமுல்­ப­டுத்தும் அரச அதி­கா­ரி­களை பாது­காப்­பது அர­சாங்­கத்தின் பொது கொள்­கை­யாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகியோர் குறித்து அவர் ஊடகங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­வித்துள்ளதாவது,

தொலை­த்தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழு­விற்கு சொந்­த­மான 600 மில்­லியன் ரூபாவை ஜனா­தி­பதி செய­லக கணக்­கிற்கு பெற்று பெளத்த விகா­ரை­க­ளுக்கு சில் துணி வழங்­கி­ய­மைக்­காக முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத்­தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோ­ருக்கு மூன்­றாண்டு சிறைத் தண்­ட­னையும் ஒரு­வ­ருக்கு தலா 2 மில்­லியன் ரூபா தண்­டமும் 50 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடும் வழங்க வேண்டும் என கூறி மேல் நீதி­மன்­றத்­தினால் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த தீர்ப்பு வந்த கையோடு நாட்டு மக்கள் ஆச்­ச­ரியம் அடைந்­தனர். இது தொடர்பில் பலர் என்­னிடம் கேட்­ட­றிந்­தனர். எனினும் குறித்த பணத்­தொ­கையை எக்­கா­ரணம் கொண்டும் தமது சொந்த தேவை­க­ளுக்கு குறித்த இருவர் பயன்­ப­டுத்­த­வில்லை என தீர்ப்­பின் மூலம் ஊர்­ஜித­மா­கி­யுள்­ளது. ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ உத்­த­ர­வி­னையே இவர்கள் செயற்­ப­டுத்­தி­யுள்­ளனர். 

2014 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி விசேட அபி­வி­ருத்தி திட்­டங்­களின் பிர­கா­ரமே சில் துணி பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 2014 ஆம் ஆண்­டுக்­கான ஜனா­தி­பதி விசேட அபி­வி­ருத்தி திட்­டத்தின் கீழ் போயா தினங்­களில் பெளத்த மத பக்­தர்­க­ளுக்கு உதவி வழங்கும் நோக்­கு­டனே குறித்த திட்­டத்­தி­னை இவர்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளனர். கொத்­த­லா­வல பாது­காப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு கணினி வழங்­கு­வதும் விசேட திட்­டங்­களில் ஒன்­றாகும். ஜனா­தி­பதி தேர்தல் அறி­விப்­புக்கு முன்பே இந்த திட்டம் உத்­தே­சிக்­கப்­பட்­டது. இந்த திட்­டத்­திற்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தின் மத­வி­வ­கார தொடர்­பாடல் செய­லாளர் வடி­னா­பஹ சோம­னந்த தேரரே பொறுப்­பா­ள­ராக இருந்து வந்­ததுடன் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சே கண்­கா­ணித்­தது. 

இதன்­படி சில்­துணி பகிர்ந்­த­ளிக்கும் முக­வர்­களின் ஊடாக பிர­தேச செய­ல­கத்தின் பிர­தான விகா­ரை­யொன்­றுக்கு குறித்த சில் துணிகள் வழங்­கப்­பட்டு, அதன்­பின்னர் பிர­தான விகா­ரை­களின் ஊடாக சிறிய விகா­ரை­க­ளுக்கு சில் துணி­களை பெற்­று­கொ­டுப்­பதே திட்­டத்தின் செயல் முறை­யாக காணப்­பட்­டது. 

இது 11 ஆயி­ரத்து 21 விகா­ரை­களை ஒன்­றி­ணைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட திட்­ட­மாகும். இதன்­போது வாக்­கா­ளர்­க­ளுக்கு அன்றி விகா­ரை­க­ளுக்கே சில் துணி பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது என்­ப­தனை கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன். எனினும் சில் துணி வழங்­கப்­ப­டு­வதே எமது பொறுப்­பாகும். அதனை யாருக்கு வழங்க வேண்டும், எப்­போது வழங்க வேண்டும் என்­ப­தனை விகா­ரா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும். இதன்­போது குறித்த நேரத்தின் போதே வழங்­கப்­பட வேண்டும் ஜனாதி­பதி செய­ல­கத்­தி­னால்‍ ­எந்­த­வொரு ஆலோச­னையும் வழங்­கப்­ப­ட­வில்லை. 

அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக சில் துணிகள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வில்லை. பாட­சா­லை­களில் வருட இறு­தியில் பாட­சாலை சீருடை வழங்­கப்­ப­டு­வது வழக்­க­மாகும். இந்த பாட­சாலை சீருடை வாக்­கு­களை பெறு­வ­தற்கு வழங்­கப்­ப­டு­வது என்று கூறு­வது வேடிக்­கை­யா­னது. இதனால் வாக்கு பெறு­பே­று­களை மாற்­றி­ய­மைக்க முடி­யுமா? அது­போ­லவே சில் துணி பகிர்ந்­த­ளிப்பை அர­சி­ய­லாக்க முடி­யாது.

அதே­போன்று குறித்த சில் துணியில் மஹிந்த ராஜ­பக் ஷ உருவம் பொறிக்­கப்­பட்ட ஸ்டிக்கர் ஒட்­டப்­பட்­டி­ருந்­ததாக வழக்கின் தீர்ப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சில் துணி எங்­கி­ருந்து கிடைக்­கின்­றது என்­ப­தனை மக்கள் அறிந்து கொள்­வ­தற்­கா­கவே குறித்த ஸ்டிக்கர் ஒட்­டப்­பட்­டது என்­ப­தனை புரிந்­து ­கொள்ள வேண்டும். 

1981 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் சட்­ட­மூ­லத்தின் ஷரத்­து­க­ளுக்கு முர­ணான வகையில் சில் துணி பகிர்ந்­த­ளிக்­க­வில்லை. கட்சி பேதங்கள் பாராமல் அனைத்து பெளத்த பக்­தர்­க­ளுக்கே சில் துணி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் மேல் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்கும் போது குறித்த வழக்கின் குற்றம் சரி­யான முறையில் இனங்­கா­ணப்­ப­ட­வில்லை. 

மேலும் ஜனா­தி­பதி விசேட அபி­வி­ருத்தி திட்­டத்­திற்கு  2014 ஆம் ஆண்டு ஒதுக்­கப்­பட்ட 1000 மில்­லியன் ரூபாவில் 400 மில்­லியன் ரூபா கொத்­த­லா­வல பாது­காப்பு பல்­க­லை­க்க­ழ­கத்­திற்கு ஒதுக்­கப்­பட்­ட­மை­யினால் நிதிப் பற்­றா­க்குறை கார­ண­மாக தொலை­த்தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழு­விடம் நிதி கோரப்­பட்­டது. இதற்கு ஆணைக்­கு­ழுவின் பணிப்­பாளர் சபையும் அனு­மதி வழங்­கி­யது. இதன்­படி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி ஜனா­தி­பதி செய­லக கணக்­கிற்கு 600 மில்­லியன் ரூபா வைப்பு செய்­யப்­பட்­டது.

எனவே இவ்­வா­றான முன்­னூ­தா­ர­ணங்­களின் ஊடாக எதிர்­கா­லத்தில் அரச ஊழி­யர்கள் தன்­னு­டைய நியா­யத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாமல் போய்­விடும். இந்த வழக்கில் தொலை­த் தொ­டர்பு கண்­கா ணிப்பு ஆணைக்­கு­ழுவின் பணிப்­பாளர் சபை அனு­ம­தித்த விடயம் வழக்கின் தீர்ப்பில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

அரசியலமைப்பில் 9 ஆவது ஷரத்தின் படி பெளத்த தர்மத்தை பாதுகாத்தல் மற்றும் வளர்ச்சிக்குட்படுத்தல் என்பதின் பிரகாரம் அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி விடுத்த உத்தரவினை பின்பற்றியமைக்கே லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். இதனைதவிர எந்தவொரு ஊழல் மோசடிக்கும் உடந்தையாகவில்லை என் பது ஊஜிதமாகியுள்ளது. 

எனவே அதிகாரத்தை பயன்படுத்தி சுய இலாபத்திற்காக அன்றி ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் உத்தியோகபூர்வ உத்தரவினை அமுல்படுத்தும் அரச அதி காரிகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொது கொள்கையாக இருக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27