அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள உயர்வின் பிர­காரம் 2020 ஆம் ஆண்­ட­ளவில் அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளம் பன்­ம­டங்­காக அதி­க­ரிக்கும். இதன்­படி விசேட வைத்­திய நிபு­ணர்­களின் அடிப்­படை சம்­பளம் 1 இலட்­சது 20 ஆயிரம் ரூபா­வா­கவும் சாதா­ரண சாரதி ஒரு­வரின் அடிப்­படை சம்­பளம் 28 ஆயி­ரம் ரூபாவாகவும் அதி­க­ரிக்கும். இதற்­கி­ணங்க 2020 இல் அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­வ­தற்கு மேல­தி­க­மாக 30 பில்­லியன் ரூபாவை அர­சாங்கம் ஈட்ட வேண்­டி­யுள்­ளது என உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார்.

Image result for அரச ஊழி­யர்­

அத்­துடன் அர­சியல் வாதிகள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் அரச அதி­கா­ரி­களை பகைத்து கொள்ள கூடாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு மாவட்­டத்தின் பிர­தேச செய­லா­ளர்கள், அபி­வி­ருத்தி அதி­கா­ரிகள், கிராம உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகி­யோ­ருக்கு அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் அறி­வுத்தும் நிகழ்வு அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் வஜிர அபே­வர்­தன மேலும் உரை­யாற்­று­கையில்,

அரச அதி­கா­ரி­களை எந்த காரணம் கொண்டும் அர­சி­யல்­வா­திகள் பகைத்து கொள்ள கூடாது. ஏனெனில் வாக்கு எண்ணும் பணியில் ஈடு­ப­டு­ப­வர்கள் அவர்­க­ளே­யாவர். அரச அதி­கா­ரிகள் உன்­ன­த­மான சேவையில் ஈடுப்­பட்டு வரு­கின்­றனர். இதன்­போது மனிதன் என்ற வகையில் தவ­றுகள் ஏற்­ப­டலாம். அதற்­காக எக்­கா­ரணம் கொண்டும் அவர்­களை தவ­று­த­லாக நினைத்து விட கூடாது. எனினும் பிர­தேச அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களின் போது அர­சி­யல்­வா­தி­களை இணைத்து கொள்­ளாது செயற்­ப­டு­வது அரச அதி­கா­ரி­களின் தவ­றாகும். எக்­கா­ரணம் கொண்டும் அரச அதி­கா­ரிகள் சுயா­தீ­ன­மாக தீர்­மா­னங்கள் மேற்கொள்ளக்கூடாது. அர­சி­யல்­வா­தி­க­ளுடன் இணைந்த செயற்­பட வேண்டும்.

அத்­துடன் அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளத்தை இது­வரை எந்­த­வொரு அர­சாங்­கமும் நினைத்து பார்க்க முடி­யாத அள­விற்கு அதி­க­ரித்தோம். இதன்­படி 10 ஆயிரம் ரூபா சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்­டது. அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள உயர்வின் பிர­காரம் அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளம் 2020 ஆம் ஆண்டு ஆகும் போது பன்­ம­டங்­காக அதி­க­ரிக்கும். இதன்­படி விசேட வைத்­திய நிபு­ணர்­களின் சம்­பளம் 1 இலட்­சது 20 ஆயி­ர­மாக அதி­க­ரிக்கும். அதே­போன்று தற்­போது 12 ஆயிரம் ரூபா அடிப்­படை சம்­பளம்  பெறும் சார­திகள் 2020 இல் 28 ஆயிரம் ரூபா அடிப்­படை சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொள்வர். இதற்­கி­ணங்க 2020 ஆம் ஆண்­ட­ளவில் அரச ஊழி­யர்­களின் சம்­பளம் வழங்­கு­வ­தற்கு மேல­தி­க­மாக 30 பில்­லியன் அர­சாங்கம் ஈட்ட வேண்­டி­யுள்­ளது.

இருந்த போதிலும் இவ்­வ­ளவு தொகை சம்­ப­ளத்தை அதி­க­ரித்தும் ஒரு சில அரச அதி­கா­ரிகள் கட்சி போக்கின் அடிப்­ப­டையில் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில்லை. முன்­னைய ஆட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதிலேயே குறியாக உள்ளனர். இது தவறாகும். கட்சி பேதங்களின் அடிப்படையில் அரச அதிகாரிகள் செயற்பட கூடாது. அதற்கு மாறாக அரச அதிகாரிகள் என்ற வகையில் இவ்வளவு தொகை சம்பளத்தை அதிகரித்து தந்த அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.