கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம்

Published By: Robert

15 Sep, 2017 | 10:28 AM
image

“குப்­பைகள் நீங்­கிய சமுத்­தி­ரத்­திற்­காக” எனும் தொனிப்­பொ­ருளின் கீழ் தேசிய கரை­யோர சுத்­தப்­ப­டுத்தல் மற்றும் கடல்­வ­ளங்கள் பாது­காப்பு வாரம் இன்று முதல் எதிர்­வரும் 22 ஆம் திக­தி ­வ­ரையில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக மகா­வலி அபி­விருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்­நி­கழ்­வா­னது இன்று ஜனா­தி­பதி தலை­மையில் கொழும்பில் ஆரம்­பித்து வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சின் கடற்­சூழல் பாது­காப்பு அதி­கார சபையின் தலைவர் ரியர் அட்­மிரல் ரோகண பெரேரா தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பசு­மைத்­திட்­டத்­திற்­க­மை­வாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செப்­டெம்பர் மாதம் மூன்­றா­வது வாரத்தில் அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அதற்­க­மை­வாக இவ்­வ­ருடம் குப்­பைகள் நீங்­கிய சமுத்­தி­ரத்­திற்­காக எனும் தொனிப்­பொ­ருளின் அடிப்­ப­டையில் கரை­யோர சுத்­தப்­ப­டுத்தல் மற்றும் கடல்­வ­ளங்கள் பாது­காப்பு வாரம் இன்று முதல் எதிர்­வரும் 22 திக­தி­வ­ரையில் அமுலில் இருக்கும். 

இந்­த நாட்­களில் சமுத்­திர பாது­காப்பு தொடர்பில் நாட்டு மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் நாட்டின் 14 மாவட்­டங்கள் கரை­யோர பிர­தே­சங்­களை கொண்டும் உள்­ளது. அவற்றை சுத்­தப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளையும் இன்று முதல் மேற்­கொள்­ள­வுள்ளோம்.

ஐக்­கிய நாடு­களின் நிலைத்­தி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்தி திட்­டத்தின் 14 ஆவது கொள்­கை­யாக தேசிய சமுத்­தி­ரத்தை பாது­காப்­பது தொடர்­பி­லான குறிக்கோள் உள்­ளது. அதனை கருத்­திற்­கொண்டும் இதற்­கான வேலைத்­திட்­டங்கள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக சர்­வ­தேச ரீதியில் ஒரு வரு­டத்­திற்கு 8 மில்­லியன் மெற்­றிக்தொன் அள­வி­லான பிளாஸ்டிக் பொருட்­களும், 150 மெற்­றிக்தொன் அள­வி­லான பொருட்­களும் கடலில் கலக்­கின்­றது. இதனால் பெரும்­பாலும் கடல் மாச­டை­கின்­றது. அவ்­வாறு கடலில் கலக்கும் 60 வீத­மான பொலித்தீன், பிளாஸ்டிக்­பொ­ருட்­களை மீன் கடல் வாழ் உயி­ரி­னங்­களும் உட்­கொண்டு உயி­ரி­ழக்­கின்­றன. 

எனவே எமது கடல் வளத்­தையும் எமது நாட்­டுக்கே உரித்­தான கடல்வாழ் உயி­ரி­னங்­க­ளையும் பாது­காக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. இதனை கருத்­திற்­கொண்டே குறித்த கடல் வளங்கள் பாது­காப்பு தேசிய வாரம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் சர்­வ­தேச கரை­யோர தூய்­மைப்­ப­டுத்தல் நிகழ்ச்­சித்­திட்­டத்தில் இலங்­கையின் கடற்­கரை பிர­தே­சங்­களில் மாத்­திரம் 21 இலட்­சத்து 27 ஆயி­ரத்து 565 சிகரட் துண்­டு­களும் ஒரு இலட்சத்து 24 ஆயி­ரத்து 470 பிளாஸ்டிக் போத்­தல்­களும் 4 இலட்­சத்து 24 ஆயி­ரத்து 934 பொலித்தீன் பைகளும் 4 இலட்­சத்து 2 ஆயி­ரத்து 375 கண்­ணாடி போத்­தல்­களும் அவை தவிர்ந்த ஏனைய பல்­வேறு பொருட்­களும் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இம்­முறை அவ்­வாறு கிடக்கும் குப்­பை­களை அகற்­று­வ­தற்கு 1500 க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களை இந்­த நி­கழ்ச்சி திட்­டத்தில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் முடிவு செய்­துள்­ளது. 

மேலும் சகல பாடசாலை மாணவர்­களுக்கும் பொதுமக்களுக்கும் இது தொடர் பிலான விளக்கமளிக்கவுள்ளதுடன் அவர்க ளையும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணை த்துக்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06