கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்பு : மக்கள் மகிழ்ச்சி

Published By: Digital Desk 7

14 Sep, 2017 | 05:12 PM
image

நீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

மீள்குடியேற்றத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே நில அளவீட்டினை தாம் பார்ப்பதாகவும் அது மகிழ்வினை தருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரணைதீவு  மக்கள் 2008ம் ஆண்டிற்கு பின்னர் குறித்த பகுதியில் தங்கி நின்று தொழில் புரிவதற்கு  கடற்படையினர் அனுமதி வழங்காமையால் அதிக எரிபொருள் செலவுடன் மீன்பிடித்து , அங்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய கடல் வளங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து தொடர் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்நிலையில் இறுதியாக இடம்பெற்ற  பேச்சுவார்த்தையில் நில அளவீடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை மனதளவில் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர். தம்மை மீள்குடியேற்றம் செய்யும் பட்சத்தில் இந்த அரசினை வாழ்நாளெல்லாம் நன்றியோடு இருப்போம் எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதே வேளை எடுக்கப்பட்ட முயற்சியை விரைவுபடுத்திதருமாறும், மழைகாலத்திற்கு முன்னர் அங்கு சென்று வீடுகளை அமைத்துக்கொள்ள உதவுமாறும் மக்கள் கோருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22