எம்.எம்.மின்ஹாஜ்

டிசம்பர் மாதம் வரவு செலவுத்திடத்திற்கான பணிகள் நிறைவடைந்த பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் கோரினோம். இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஜனவரி மாதம் நடத்தப்படும். தேர்தலின் பின்னர் தேர்தல் முறைமை மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Image result for ranill virakesari

கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள்,அபிவிருத்தி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தவர்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தின் கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் அறிவுறுத்தும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.