(ந.ஜெகதீஸ்)

நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Image result for மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, மாத்தறை ஆகிய 5 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிப்பேற்படும் பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இன்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.