(ஆர்.யசி)

இலங்கை விவகாரத்தில் தலையிட  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செ யிட்  அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை. அமெரிக்காவை திருப்திப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ள இராஜதந்திர விபச்சாரியே அவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். காணமால் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியல் அமைப்பும் தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள். சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம்  உருவாக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

Image result for விமல் வீரவன்ச virakesari

தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றபோதே  அவர் இதனை குறிப்பிட்டார்.