கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள திண்மகழிவகற்றல் பிரச்சினை தொடர்பான வழக்கு எதிர் வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி மா. கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு மேலும் 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் 

“வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை சேகரிப்பதற்கு இன்றும் நாம் தயாராகவுள்ளோம் ஆனால் அதைக் கொண்டு போடுவதற்கு எங்களுக்கு இடமில்லை அவ்வாறு இடமிருக்குமாயின் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் குறித்த பிரச்சினையை எம்மால் தீர்க்க முடியும்” என தெரிவித்தார்.