வீர ­வீ­ராங்­க­னைகள் அனை­வரும் இணைந்து தெற்­கா­சியப் போட்­டி­களில் இலங்­கைக்கு வெற்­றியைத் தேடித் தாருங்கள். அதை மட்­டும்தான் உங்­க­ளி­ட­மி­ருந்து நாம் எதிர்­பார்க்­கிறோம் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­ததார்.

12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திக­தி­வரை இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தில் நடை­பெ­று­கி­றது.

இந்த விளை­யாட்டுப் போட்­டியில் கலந்­து­கொள்ளும் வீர வீராங்­க­னைகள் அனை­வரும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ரவின் தலை­மை­யி­லான கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்­டனர்.

இதில் உரை­யாற்­றும்­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் பேசு­கையில்,

வீர வீராங்­க­னை­க­ ளுக்கு தேவை­யான அனைத்­தையும் நாம் செய்­து­விட்டோம். இதற்கு பிர­தி­யு­ப­கா­ர­மாக உங்­க­ளி­ட­மி­ருந்து நாம் எதிர்­பார்ப்­பது பதக்­

கங்­க­ளைத்தான். அனை­வரும் ஒன்­று­கூடி உழைத்து இலங்­கைக்கு தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டியில் வெற்­றியைத் தேடித் தாருங்கள்.

இந்தப் போட்­டியில் தங்­கப்­ப­தக்கம் வெல்­ப­வர்­க­ளுக்கு 5 இலட்சம் ரூபாப் பணப்­ப­ரிசும்இ வெள்ளிப் பதக்கம் வெல்

பர்­க­ளுக்கு 3 இலட்சம்

ரூபாவும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்க ளுக்கு 1 இலட்சம் ரூபா

வீதமும் பரிசுகளை வழங்க நாம் எதிர்பார்த் திருக்கிறோம். அனைத்து வீரர்களுக்கும் திறமை யை வெளிப்படுத்தி பதக்கங்களை குவிக்க எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.