காபூல் கிரிக்கெட் மைதானம் அருகே மேற்கொள்ளப்பட்ட தற்கொலைபடை தாக்குதலில் பொலிஸார் உள்பட 3 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று உள்ளூர் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.

இந்நிலையில், மைதான வாயிலில் அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியைக் கடந்து தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் திடீரென நுழைய முயன்றவேளையில், பாதுகாப்பு பணியிலிருந்து பொலிஸார் குறித்த தீவிரவாதியினை மடக்கி பிடிக்க முயற்சித்த போது,தீவிரவாதி இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலில் பாதுகாப்புக்கு பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியதோடு, மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் கூறுகையில், தற்கொலைபடை தாக்குதல் நடந்தபோது மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் சபை அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளாதாக தெரிவித்தனர்.

மேலும், தற்போது காபூல் கிரிக்கெட் மைதானத்தினை சுற்றி பலத்த பாதுகாப்பு இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.