யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் திருச் சொரூபம் இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ தெரிவிக்கின்றார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட அடம்பன் பொலிஸ் பகுதியில் உள்ள நாயாற்று வழி பிரதான வீதிக்கு அருகில் சுமார் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 அடி உயரம் கொண்ட புனித அந்தோனியர் திருச் சொரூபமே இவ்வாறு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன்  பொலிஸார் உடைத்து சேதமாக்கப்பட்ட அந்தோனியார் சொரூபத்தை பார்வையிட்டதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.