அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எஸ்.ஏ.பி.சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட ரொமேஷ் ஜயவர்தன உள்ளிட்ட பணிப்பாளர் சபை கடந்த 31 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கல சமவீரவினால் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபை என்பன, நிதி அமைச்சின் கீழ் கொண்டுவர முன்னர் வெளிவிவகார அமைச்சின் கீழே செயற்பட்டன.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இரண்டு லொத்தர் சபைகளும் மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியில் இருந்து நீங்கியவுடன் தேசிய லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட ஷர்மிலா பெரோராவும் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியிருந்தார்.

இதனையத்தே, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எஸ்.ஏ.பி.சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.