மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் வைத்து இன்று  அதிகாலை 5 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த  ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு திராய்மடு 4ஆம் குறுக்கைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளதோடு குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.