ஈராக் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் சிலரின் மனைவிமார்கள் சிலர் உரையாடும் வீடியோ பதிவென்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவில் “நாங்கள் இங்கு கொலை செய்ய வரவில்லை..,வாழ்வதற்கே வந்துள்ளோம்”  என ஒருவர் தெரிவிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

சர்வதேச ஊடகமொன்றின் செய்தி பிரிவினை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரே குறித்த காணொளி பதிவினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முகாமில் 1400 இற்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஐஎஸ் தீவிரவாதிகளின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இரகசிய முகாமில் தங்கியிருப்பவர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிலர் அம்முகாமிலிருந்து வெளியேறி தங்களின் சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.