முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் (எப்.சி.ஐ.டி) முன்னிலையாகியுள்ளார்.

Image result for யோஷித்த virakesari

கல்­கிசை மற்றும் இத்­ம­லானை பகு­தி­களில் காணி­களை கொள்­வ­னவு செய்­தமை அதில் ஒரு காணியில் அதிசொகுசு வீடொன்­றினை நிர்­மா­ணித்­தமை தொடர்பில் இன்று விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக  நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­வித்­தன.

கல்­கிசை மிஹிந்து மாவத்­தையில் 31 பேர்ச் காணியை கொள்­வ­னவு செய்­தமை, இரத்­ம­லானை கெக்­க­டிய பிர­தே­சத்தில் 31.5 பேர்ச் காணியில் அதிசொகுசு வீடொன்­றினை நிர்­மா­ணித்­தமை மற்றும் அதற்­கான பணத்தை உழைத்த, செல­வ­ளித்த விதம் தொடர்­பிலும் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதேவேளை, யோஷித ராஜபக்ஷவுக்கு கடந்த 12ம் திகதி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.