பரு­வ­ம­ழையைத் தொடர்ந்து, கிழக்கு மாகா­ணத்தில் டெங்கு நோய் குறித்த அச்­ச­மேற்­பட்டுள்ளது. கிழக்கு மாகா­ணத்தின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் துப்­பு­ரவுப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மர­ணத்தை ஏற்­ப­டுத்தும் கொடிய டெங்கு நோய் குறித்து பொது­மக்கள் விழிப்­புடன் தொழிற்­ப­டு­மாறு சுகா­தார உத்­தி­யோ­கத்தர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

Image result for மழை virakesari

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. வடக்கு, கிழக்கு, மலை­யகம் உட்­பட நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் இனங்காணப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.இத­னை­ய­டுத்து, டெங்­குநோய் தொடர்பில் பொது மக்­களின் விசேட கவனம் ஈர்க்­கப்­பட்­டுள்­ளது.

டெங்கு ஒழிப்பு துப்­பு­ரவுப் பணிக்கு சுகா­தார வைத்­திய அதி­கா­ரிகள், உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் அரச உத்­தி­யோகத்தர்கள், கிராம சேவ­கர்கள், பொலிஸ் மற்றும் பொது­மக்கள், இளை­ஞர்கள் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு நல்கி வரு­கின்­றனர். பிர­தேச செய­ல­கங்கள், உள்­ளூராட்சி சபைகள், பொது நிறு­வ­னங்கள், தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்கள் என்­ப­னவும் நிறை­வான ஒத்­து­ழைப்பு நல்கி வரு­கின்­றன.

டெங்கின் இரண்­டா­வது வைரஸ் மக்­களை தாக்கி வரு­வ­தாக கண்­ட­றி­யப்பட்டுள்­ளது. வயது, பால், பிர­தேசம், மொழி வேறு­பா­டு­க­ளின்றி தாக்கி மர­ணத்தை எற்­ப­டுத்தும் கொடிய டெங்கு நோய் தொடர்பில் பொது­மக்கள் மிகவும் அவ­தானம், விழிப்பு, முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் தொழிற்­பட வேண்டும் எனவும், குடி­யி­ருப்பு வீடுகள் மற்றும் சுற்­றுப்­புறச் சூழலை துப்­பு­ர­வாகப் பரா­ம­ரிக்க வேண்டும் எனவும் சுகா­தார வைத்­திய அதி­கா­ரிகள் பொது­மக்­களை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

காய்ச்சல் ஏற்­பட்­ட­வுடன் அரு­கி­லுள்ள அரச வைத்­தி­ய­சா­லையில் அல்­லது தர­மான வைத்­தி­ய­ரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்­டு­மென பொது­மக்கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். காய்ச்சல், சிகிச்சை பெற்றும்குண­ம­டை­யாது, இரு­நாட்­க­ளுக்கு மேல் நீடிக்­கு­மானால் முறை­யான இரத்தப் பரி­சோ­தனை அவ­சி­ய­மெ­னவும் மேலும் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. டெங்கு தொடர்பில் அலட்­சியம் வேண்டாம் எனவும் வைத்­தி­யர்கள் எச்சரித்­துள்­ளனர்.

சில பிர­தே­சங்­களில் டெங்கு துப்பு­ரவுப் பணிகள் தொடர்பில் அதி­கா­ரிகள், பொது­மக்கள் அதிகம் ஆர்­வ­மின்றி உள்­ள­தாக கவலை தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நீண்ட நாட்கள் அகற்­றப்­ப­டாத குப்பை மேடுகள், துப்­பு­ரவு செய்­யப்­ப­டாத வடி­கான்கள் தொடர்பில் பொது மக்கள் பிரஸ்­தா­பிக்­கின்­றனர். அக்­க­ரைப்­பற்று பொது விளை­யாட்டு மைதானம், இலங்கை வானொலி பிறை எப்.எம்.அலு­வ­லகம் என்­ப­ன­வற்றுக் கிடையில், ஊட­றுத்துச் செல்லும் தற்­கா­லிக வடி­கானின் நிலை மிகவும் கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, இம்­மாதம் 20 முதல் 26 வரை­யான ஒரு­வார காலம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக, சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது. சுமார் 3000 குழுக்கள் டெங்கு ஒழிப்பு துப்புரவுப் பணியில் ஈடுபடவுள்ளன. ஜனாதிபதி விசேட செயலணி, ஆயுதப் படையினர், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.