வீட்டை விட்டு சென்ற காதல் ஜோடிக்கு நடந்த கொடூரம்

Published By: Robert

14 Sep, 2017 | 11:03 AM
image

திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை வைத்திருந்த ஜோடியொன்றை மின்சாரத்தை பாய்ச்சி குடும்ப கௌரவத்துக்காக படுகொலை செய்வதற்கு  அவர்களது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டு அவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான இனத்துவ தலைவர் ஒருவரை பாகிஸ்தானிய பொலிஸார் தேடி வருகின்றனர்.

தமது குடும்பத்தினருக்கு தெரியாமல் காதல் தொடர்பு வைத்திருந்த  கராச்சி நகரைச் சேர்ந்த குறிப்பிட்ட 18  வயது இளைஞனும் 16  வயது சிறுமியும்   எவருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு சென்றிருந்தனர்.

அந்த இளைஞனும் சிறுமியும் பஷ்துன் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் அந்த இனத்துவ குழுவைச் சேர்ந்த தலைவர் ஊரைவிட்டு தலைமறைவாகியுள்ள அந்த ஜோடியைத் தேடிக் கண்டுபிடித்து படுகொலை செய்ய அவர்களது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்த  குறிப்பிட்ட இளைஞனின் குடும்பத்தினர் அவர்களுக்கு முறைப்படி திருமணத்தை நடத்தி வைப்பதாக வாக்குறுதியளித்து அவர்களை கராச்சி நகருக்கு மீள அழைத்து வந்துள்ளனர்.

 இதனையடுத்து  இளைஞன் அவனது சொந்தத் தந்தையாலும் சிறுமி அவரது தந்தை மற்றும் மாமனாராலும் மின்சாரத்தைப் பாய்ச்சி கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து  அந்தப் படுகொலைகளை மறைக்க அவர்கள்  இளைஞனதும் சிறுமியதும் சடலங்களை புதைக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மேற்படி படுகொலை களுடன் தொடர்புடைய குடும்ப உறுப்பி 

னர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட் டுள்ளனர்.  ஆனால் படுகொலைக்கு உத்தரவிட்ட இனத்துவ தலைவர் தொடர்ந்து தலைமறைவான நிலையில் உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17