பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக பாகிஸ்தான் மண்ணில் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 போட்­டிக்கு இலங்கை அணியை அனுப்­பு­வதா இல்­லையா என்­பது குறித்து இன்னும் முடி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. எமது வீரர்களை பலிக்­க­டா­வாக்க நாங்கள் ஒரு­போதும் தயா­ரில்லை என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜயசேகர தெரிவித்தார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற  அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் கிரிக்கெட் அணித்­த­லை­வர்கள், சிரேஷ்ட வீரர்கள்,  முன்னாள்  கிரிக்கெட் குழுத்­த­லை­வர்கள் என அனை­வரும் கலந்­து­கொள்ளும்    விசேட செய­ல­மர்வு நாளை நடை­பெ­ற­வுள்­ளது.  

இதன்­போது கிரிக்­கெட்டின் எதிர்­காலம் தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­படும். தற்­போது  விளை­யாடும்  வீரர்­களும் இந்த செய­ல­மர்­வுக்கு  அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.  இதன்­போது கொள்கை ரீதி­யான தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­படும்.  

அந்தத் தீர்­மா­னங்கள் கிரிக்கெட் சபைக்கு சமர்ப்­பிக்­கப்­படும். அவற்றை கிரிக்கெட் சபை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும் என்றார். 

பாகிஸ்தான் அணி­யுடன் விளை­யாட இலங்கை பாகிஸ்தான் செல்­லுமா என்று அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது,  இலங்கை -– பாகிஸ்தான் தொட­ரா­னது  டுபா­யி­லேயே நடை­பெ­ற­வுள்­ளது. பாகிஸ்தான் செல்­வது தொடர்பில் இது­வரை தீர்­மானம் எடுக்­க­ப்படவில்லை. ஏற்­க­னவே அந்த நாட்டில் பாது­காப்பு தொடர்பில் கசப்­பான அனு­ப­வங்­களை எமது வீரர்கள் பெற்­றுள்­ளனர்.  எனவே பாது­காப்பு தொடர்­பான நூறு­வீத உத்­த­ர­வாதம் கிடைத்தால் மட்­டுமே நாங்கள் பாகிஸ்தான் போகலாம்.  எமது வீரர்­களை பலி­க்க­டா­வாக்க  நாங்கள் ஒரு­போதும் தயா­ரில்லை.  ஆனால் பாகிஸ்­தா­னு­ட­னான இரு­த­ரப்பு உறவை நாங்கள் பலப்­ப­டுத்­த­வேண்டும்.   அந்த நாடு  எமக்கு அவ­ச­ரத்­துக்கு உத­வு­கின்­றது. தற்­போது  கூட  உதவி வரு­கின்­றது.  

இரு­ப­துக்கு 20 போட்டி பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வுள்­ளதே, அதற்கு வீரர்­களை அனுப்­பு­வீர்­களா என்று கேட்டதற்கு, அது தொடர்பில் நாங்கள் இன்னும் முடி­வெ­டுக்­க­வில்லை. நூறு­வீதம் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் பரி­சீ­லிக்­கலாம் என்றார்.