இலங்­கையில் கிரிக்கெட் விளை­யாட்டை மேம்­ப­டுத்த பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்து சீர்­தி­ருத்­தங்­களை செய்ய வேண்டும் என்ற புது வியூ­கங்­க­ளுடன் கள­மி­றங்­கி­யுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜய­வர்­தன.

Image result for மஹேல ஜய­வர்­தன virakesari

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் கால­மாக சந்­தித்து வரும் தொடர் தோல்­வி­க­ளுக்கு பாட­சாலை மட்ட கிரிக்­கெட்டில் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டு­களே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

அதிலும் குறிப்­பாக, இலங்கை அணி அண்­மைக்­கா­ல­மாக சந்­தித்து வரு­கின்ற தோல்­வி­க­ளுக்கு பாட­சாலை கிரிக்­கெட்டும் பொறுப்­புக்­கூற வேண்டும் எனவும், பாட­சாலை மட்­டத்தில் விளை­யா­டு­கின்ற வீரர்கள் பொருத்­த­மான முறையில் திற­மை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அடை­யாளம் காணப்­ப­டாமை போன்ற கார­ணிகள் கிரிக்கெட் விளை­யாட்டு இவ்­வாறு பின்­ன­டைவை சந்­திக்க காரணமாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்டு வந்­தது.

இந்­நி­லையில், இலங்கை கிரிக்­கெட்டை அபி­வி­ருத்தி செய்யும் நோக்­கிலும், பின்ன­டைவை எதிர்­நோக்­கி­யுள்ள பாட­சாலை கிரிக்­கெட்டை முன்­னேற்­று­வ­தற்­கா­கவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சமின் ஆலோ­ச­னைக்­க­மைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்­சி­யா­ளர்­களைக் கொண்ட விசேட குழு­வொன்று கடந்த சில தினங்­க­ளுக்கு முன் நிய­மிக்­கப்­பட்­டது.  

இத­னை­ய­டுத்து பாட­சாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் கல்வி அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வி­ன­ரு­ட­னான விசேட சந்­திப்பு நேற்று கல்வி அமைச்­சரின் தலை­மையில் கொழும்பில் இடம்­பெற்­றது. இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சிதத் வெத்தமுனி, மஹேல ஜயவர்தன, திலின கண்டம்பே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.