தீர்வின்றேல் நாளை முதல் மின்சாரத்துறை ஸ்தம்பிதமடையும்.!

Published By: Robert

14 Sep, 2017 | 09:32 AM
image

தமது கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் உரிய தீர்வை முன்­வைக்­கா­வி­டத்து நாளை நண்­பகல் முதல் பரந்­து­பட்ட தொழிற்­சங்கப் போராட்­டத்தில் மின்­சார சபை ஊழி­யர்கள் இறங்­க­வுள்­ள­தாக இலங்கை ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்க முன்­ன­ணியின் ஏற்­பாட்­டாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.

Image result for மின்­சார சபை ஊழி­யர்கள் virakesari

மின்­சார சபை ஊழி­யர்கள் பல்­வே­று­பட்ட கோரிக்­கை­களை முன்­வைத்து நேற்று நண்­பகல் முதல் தொழிற்­சங்கப் போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர். அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மின்­சார சபை ஊழி­யர்கள் நீண்ட கால­மாக சம்­பளப் பிரச்­சி­னை­யினை எதிர்­கொண்­டுள்­ளனர். அதற்கு உரிய தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். அத்­துடன் மின்­சார சபையில் ஏற்­பட்­டுள்ள நஷ்­டத்தை ஈடு­செய்­வ­தற்கு மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு செய்­யு­மாறு மின்­சார சபையின் நிர்­வா­கத்­தினால் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்­யக்­கூ­டாது. ஏனெனில் மின்­சார சபையில் இடம்­பெறும் ஊழல் மோச­டி­க­ளி­னா­லேயே மின் கட்­ட­ணத்தில் ஐம்­பது சத­வீத சுமை­யினை பாவ­னை­யா­ளர்கள் எதிர்­கொள்ள நேர்­ந்துள்­ளது. ஆகவே அச்­ச­பைக்குள் நிலவும் மோச­டி­களை தடுப்­ப­துடன் மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்­யக்­கூ­டாது.

மேற்­சொன்ன பிர­தான கோரிக்­கைகள் உட்­பட இன்னும் சில கோரிக்­கை­களை முன்­வைத்து தொழிற்­சங்கப் போராட்­டத்தில் இறங்­கி­யுள்ளோம். 

எனினும் வைத்­தி­ய­சாலை உட்­பட முக்­கிய இடங்­களில் பணியில் ஈடு­பட்­டுள்ளோம்.  இருந்த போதிலும் அர­சாங்­கத்­திற்கு நாம் நாளை வெள்­ளிக்­கி­ழமை நண்­பகல் வரை அவ­காசம் வழங்­கு­கிறோம். அக்­கா­லக்­கெ­டுவில் எமது கோரிக்­கை­க­ளுக்கு உரிய  தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். அல்­லாது போனால் நாளை வெள்­ளிக்­க­ிழமை நண்­பகல் முதல் பரந்­து­பட்ட தொழிற்­சங்கப் போராட்­டத்தில்  இறங்­க­வுள்ளோம்.

அப்­போ­ராட்­டத்­திற்கு எதிராக அரசாங்கம் எவ்வகையான அழுத்தத்தை பிரயோகித்தாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31