மஹிந்த மீது தற்­போது யார் வேண்­டு­மா­னாலும் வழக்கு தொட­ரலாமா.?

Published By: Robert

14 Sep, 2017 | 10:28 AM
image

முன்னாள் ஜனா­தி­பதியின் செய­லாளர் லலித் வீர­துங்க, தொலைத்­தொ­டர்பு  ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி யோர் தொடர்­பான  நீதி­மன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ தானே சில் துணி­களை வழங்­கு­வ­தற்கு உத்­த­ர­விட்­ட­தாக தெரி­வித்­தி­ருக்­கிறார். எனவே அவர் மீது பொறுப்­புக்­கூறல் மற்றும் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கு­களை தற்­போது யார் வேண்­டு­மா­னாலும்  தொட­ரலாம் என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சாளர்  ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். 

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட  இணை அமைச்­ச­ரவைப் பேச்­சாளர்  இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

சில்  துணி வழங்­கப்­பட்ட விவ­காரம்  தொடர்­பாக  ஆழ­மாக பார்க்­க­வேண்டும்.  இந்த சில் துணி­க­ளுடன் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு  ஆத­ர­வான துண்­டுப்­பி­ர­சு­ரங்­களும்   கடி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. 

2014 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய இது­தொ­டர்பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார்.  மேலும்  இந்த விட­யத்தில் யாரா­வது  வழக்­குத்­தாக்கல் செய்தால் தான் தன்­னி­ட­மி­ருக்­கின்ற   ஆதா­ரங்­களை சமர்ப்­பிப்­ப­தாக அவர்  கூறி­யி­ருந்தார். 

அந்த வகையில் இவ்­வாறு  தேர்தல் சட்­டங்­களை மீறக்­கூ­டாது என  அப்­போ­தைய  ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்­கவே அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­தி­ருந்தார். ஆனால் அவரே  அந்த சட்­ட­வி­தி­மு­றை­களை மீறி­யி­ருக்­கின்றார். 

இங்கு அதி­காரம்  தவ­றாக பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. தேர்தல் ஆணை­யாளர்  எச்­ச­ரிக்கை விடுத்தும் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. என­வேதான் இந்த தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. தீர்ப்பில்  நீதி­பதி சட்­ட­மீ­றல்­களை  சரி­யான முறையில் விப­ரித்­தி­ருக்­கின்றார். 

கேள்வி: சில் துணி­களை வழங்­கு­மாறு  தானே கூறி­ய­தாக  முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த தற்­போது கூறி­யி­ருக்­கி­றாரே?

பதில்: அவர் தற்­போது  வீரன் போன்று பேசு­வதில் அர்த்­த­மில்லை.  அவரின் கூற்றைப் பார்க்­கும்­போது அவர் தவறு செய்­தி­ருப்­ப­தா­கவே தெரி­கி­றது.  இந்த வழக்கு 24 நாட்­க­ளாக நீதி­மன்­றத்தில் நடை­பெற்­றது. அந்த நேரத்தில்  மஹிந்த ராஜ­பக்ஷ  நீதி­மன்­றத்தில் ஆஜ­ராகி எத­னையும் கூற­வில்லை. அவ்­வாறு கூறி­யி­ருந்தால்  ஏதா­வது நடந்­தி­ருக்­கலாம். 

கேள்வி: தற்­போது மஹிந்த இவ்­வாறு கூறி­யுள்­ளதால் 19 ஆவது திருத்த சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக வழக்கு போட முடி­யுமா?

பதில்: 19 ஆவது திருத்த சட்டம் இல்­லா­வி­டினும் கூட மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக தற்­போது யாரும்  வழக்குத் தாக்கல் செய்­யலாம்.  அவர் தானே பொறுப்­புக்­கூ­று­வ­தாக தெரி­விப்­பது  தொடர்­பா­கவும்  நீதி­மன்ற அவ­ம­திப்பு குறித்தும்  வழக்­குத்­தாக்கல் செய்­யலாம். 

கேள்வி: மகா­சங்­கங்கள்  எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னவே?

பதில்: முதலில் மகா­சங்­கங்­களில் யார்  இருக்­கின்­றார்கள் என்று பார்க்­க­வேண்டும்.  தேங்காய் ஒன்று திரு­டிய  மாண­விக்கு  தண்­டனை அளிக்­கும்­போது   இந்த மகா­சங்கம் எங்கே போனது.  தனது தாயின் மருத்­துவ செல­வுக்­காக மகன் ஒருவன் ஒரு­வரின் சங்கச் சங்­கி­லியை அறுத்­த­போது அவ­ருக்கு  தண்­டனை விதிக்­கப்­பட்­ட­போது   இந்த மகாசங்கம் எனக்கூறப்படுவர்கள் எங்கே போனார்கள். 

கேள்வி: அமைச்சர் தயாசிறி ஜயசேகர லலித் வீரதுங்க தொடர்பில் அனுதாபம் தெரிவித்திருந்தார். ஏன்?

பதில்: (தயாசிறி)  லலித் வீரதுங்க ஒரு திறமையான அரச அதிகாரி, எனவே அவர் இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் நான் கவலை வெளியிட்டேன்.  அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17