சர்­வ­தேச இந்­திய திரைப்­பட அகா­டமி நடத்­திய' ஐபா உற்­சவம்’ விழாவில் பாகு­பலி திரைப்­ப­டத்­துக்கு 6 விரு­துகள் கிடைத்­துள்­ள­தோடு கடந்த வரு­டத்தின் சிறந்த வில்லன் நடி­க­ராக அர­விந்சாமி தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ் விழா நேற்­று­முன்­தினம் ஹைத­ரா­பாத்தில் ஆரம்­ப­மா­கி­யது. இதில் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளத்தில் வெளி­யான ‘பாகு­பலி’ சிறந்த திரைப்­ப­ட­மாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­தி­ரைப்­ப­டத்தில் நடித்த சத்­யராஜ், ரம்­யா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் விருது பெற்­றனர்.

‘தனி ஒருவன்’ திரைப்­ப­டத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த நடி­க­ருக்­கான விருது கிடைத்­தது. நயன்­தா­ரா­வுக்கு ‘மாயா’ படத்தில் நடித்­த­தற்­காக சிறந்த நடி­கைக்­கான விருது வழங்­கப்­பட்­டது.

‘காஞ்­சனா–2’ சிறந்த திகில் நகைச்­சுவை திரைப்­ப­ட­மாக தெரிவு செய்­யப்­பட்­டது. இதில் நடித்த கோவை சர­ளா­வுக்கு சிறந்த நகைச்­சுவை நடி­கைக்­கான விருது கிடைத்­தது. தனி ஒருவன் படத்தில் நடித்த அர­விந்­சா­மிக்கு சிறந்த வில்­ல­னுக்­கான விருது கிடைக்­கப்­பெற்­றது. கத்தி’ திரைப்­ப­டத்­துக்கு இசை­ய­மைத்த அனிருத் சிறந்த இசை அமைப்­பா­ள­ருக்­கான விருதை பெற்றார்.