வயிற்றில் சூட்­சு­ம­மாக அணிந்­தி­ருந்த பட்­டியில் இருந்து 7700 கிராம் தங்கம் மீட்பு.!

Published By: Robert

14 Sep, 2017 | 10:25 AM
image

சுமார் நான்கு கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களை தமது வயிற்றுப் பகு­தியில் சூட்­சு­ம­மாக கட்­டப்­பட்­டி­ருந்த வளையும் தன்மை கொண்ட பட்டி ஒன்றில் மறைத்து நாட்­டுக்குள் கடத்­தி­வந்த இரு பெண்­களை நகை­க­ளுடன் சுங்கப் பிரி­வினர்  கைது செய்­தனர். 

Image result for தங்கம் மீட்பு virakesari

டுபாயில் இருந்து நேற்று அதி­காலை 5.00 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்­கவை வந்­த­டைந்த யூ.எல்.226 எனும் விமா­னத்தில் வந்­தி­றங்­கிய கொழும்பைச் சேர்ந்த 41,49 வய­து­களை உடைய இரு பெண்­க­ளையே இவ்­வாறு கைது செய்­த­தாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன கேச­ரிக்கு தெரி­வித்தார். இந் நிலையில் கைது செய்­யப்பட்ட இரு­வரும் தடுத்து வைக்­கப்பட்டு பிரதி சுங்கப் பணிப்­பாளர் பரா­கி­ரம பஸ்­நா­யக்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்ப்ட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 நேற்று அதி­காலை 5.00 மணிக்கு டுபாயில் இருந்து வந்த இலங்கை விமான சேவைக்கு சொந்­த­மான குறித்த விமானம் தரை இறங்­கி­யுள்­ளது. இதன் போது தோற்­றத்தில் இள­மையைக் காட்டும் இரு பெண்கள் சாத­ர­ண­மாக சுங்க பிரிவின் கண்­கா­ணிப்பைத் தாண்டி பய­ணிக்கும் போது, சுங்கப் பிரிவின் போதைப் பொருள் கட்­டுப்­பாட்டு பிரிவின் அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இதன் போது அவ்­விரு பெண்­க­ளையும் சுங்கப் பிரிவின் அதி­கா­ரிகள் மீள அழைத்து விசா­ரித்­துள்­ளனர்.

 இதன்­போது தாம் கொழும்பு பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் எனவும் 41, 49 வய­து­களை உடைய பெண்கள் எனவும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அவர்­களில் ஒருவர் தான் சொத்­துக்கள் தொடர்­பி­லான வர்த்­தக ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­று­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

 இந் நிலையில் மேல­திக  விசா­ரணை மற்றும் சோத­னை­களின் போது அப்­பெண்­களின் வயிற்றுப் பகு­தியில் சூட்­சு­ம­மாக வளையக் கூடிய பட்­டி­யொன்று அணி­யப்­பட்­டுள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து  அது தொடர்பில் முன்­னெ­டுத்த மேல­திக நட­வ­டிக்­கையில் அந்த பட்­டி­களில் 8 பைகளில் தங்க நகைகள் சூட்­சு­ம­மாக மறைத்து வைக்­கப்பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டது.

 இத­னை­ய­டுத்து அவ்­விரு பெண்­க­ளையும் கைது செய்­துள்ள சுங்கப் பிரிவின் விசா­ர­ணை­யா­ளர்கள், அவர்­களை தடுத்து வைத்து விசா­ரணை செய்து வரு­கின்­றனர்.

அப்­பெண்­க­ளிடம் இருந்து 7700 கிராம் நிறைக் கொன்ட 4 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள் இதன்­போது சுங்கப் பிரி­வி­னரால் மீட்­கப்பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் கட்­டு­நா­யக்க விமான நிலைய சுங்கப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்கவின் மேற்பார்வையில் சுங்க விசாரணைப் பிரிவின் விசாரணையாளர்களான நுவன் அபேநாயக்க, ரசிக சமஞித், ஸ்ரீ லால் விஜேவர்தன உள்ளிட்டோரின் கீழான குழுவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08