வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் வயல் காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மூன்று 3 கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் வசித்து வரும் அஷோக ரத்னாயக்க தனது வயல் காணியை துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது இன்று காலை 11.45 மணியளவில்  வெடிக்காத நிலையிலிருந்த 3கைக்குண்டுகளை அவதானித்த உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற  பொலிஸார் அப்பகுதியை பார்வையிட்ட போது மேலும் அப்பகுதியில் மோட்டார் குண்டுகள் இருப்பதாக சந்தேகம் கொள்வதாகவும், நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.