"நான் வளர்த்த மரங்களை அரசாங்கம் வெட்டுவதற்கு இடமளியேன்" எனக் கோரி வட்டகொடை, மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜி.பந்துல பண்டார என்பவர் மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அவர் தனது போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,

" எனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் 12000 - 15000 ரூபா வரையிலான தொகையை அரசாங்கத்திற்கு செலுத்தி,  அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளை பெற்றிருந்த போதிலும் அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டுகின்றார்கள்.

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு, இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். 

எனக்கு சொந்தமான மரங்களை என்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளேன், இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்கிறேன்.

நான் வளர்த்த மரங்கள் உபயோகத்திற்காக வெட்டும் தருவாயில் உள்ளது, இதனால் எனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும், அனுமதி வழங்கும் வரை எனது இப் போராட்டம் தொடரும்"  என தெரிவித்தார்.