முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின்  வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

நாளை மறுதினம்  மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று எதிர்வரும் 17ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருநாள் திருப்பலியுடன் அன்னையின் ஆசீர்வாதம் இடம் பெறவுள்ளது. 

யுத்தகாலத்தில் சூனியப் பிரதேசமாக காணப்பட்டது. முகமாலையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத பிரதேசமாகவும் காணப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் அதிகளவு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதோடு தற்போதும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியில் ஈடுப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது