விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பிச் செல்வதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டு 57 நாட்களாக லலித் ஜயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்குமாறு அவருடைய சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.