இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வியை ஆராய விஷேட வேலைத்திட்டம்

Published By: Digital Desk 7

13 Sep, 2017 | 03:32 PM
image

இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச அணியாகவும் கிரிக்கெட் வீரர்கள் உலக வீரர்களாகவும் அங்கீகாரம் பெற்று மிக நீண்ட காலமாக தனக்கென தனியானதொரு இடத்தை தக்கவைத்து கொண்டு வந்துள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக மெது மெதுவா தனது தனி இடத்திலிருந்து சரிந்து கொண்டு வருகிறதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இலங்கை அணியின் தொடர்ச்சியான சரிவுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து சரிந்து கொண்டுவரும் இலங்கை அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல என்னென்ன உத்திகளை கையாள்வது தொடர்பான தீர்மானங்களை எட்டக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றை விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஏற்பாடு செய்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்திற்காக கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர்கள், உள்ளுர் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், முன்னாள் தேசிய கிரிக்கெட் அணித்தலைவர்கள், அனைத்து கிரிக்கெட் சிரேஷ்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள், கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள், தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள், தேசிய விளையாட்டு துறைகளில் நிபுணத்துவமுடைய நிபுணர்கள், மாகாண மற்றும் மாவட்ட கிரிக்கெட் கழகத் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி பத்தரமுல்லை “வோடர்ஸ் எட்ஜ்” ஹோட்டலில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 4 மணி வரையில் நடைபெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07