வெட்கித் தலை குனிகிறோம் 

Published By: MD.Lucias

27 Jan, 2016 | 09:04 AM
image

 

ஞான­சார தேரரை விளக்­க­ம­றி­யலில் வைத்­தது நீதித்­து­றையின் தீர்ப்­பாகும். இதில் எமக்குத் தொடர்பு கிடை­யாது. நீதி­மன்­றத்தின் முன்­பாக காவி உடையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் உண்­மை­யான பிக்­கு­களா என்­பது எமக்கு தெரி­ய­வில்லை. போலித் தேரர்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் இட­ம­ளிக்க முடி­யாது பௌத்­தர்கள் என்ற வகையில் இவ்­வி­டயம் தொடர்பில் வெட்கி வேத­னை­ய­டை­கிறோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொண்­டாலும் முத­லீட்டு பொரு­ளா­தார ஆலோ­ச­னை­களை அர­சாங்கம் பெற்றுக் கொண்­டாலும் உள்­நாட்டு நீதித்­து­றைக்குள் தலை­யீடு செய்­வ­தற்கு வெளி­நா­டு­க­ளுக்கோ வெளி­நாட்டு நீதி­மன்­றங்­க­ளுக்கோ இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்றும் பிர­தமர் திட்­ட­வட்­ட­மாகத் அறிவித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள 12 நாடு­க­ளு­ட­னான முத­லீட்டு உடன்­ப­டிக்­கைகள் தொடர்பில் மஹிந்த அணியின் பிர­தா­னி­யான தினேஷ் குண­வர்த்­த­ன­வினால் கொண்டு வரப்­பட்ட சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் இங்கு தொடர்ந்து கூறு­கையில்,

ரோம் உடன்­ப­டிக்­கையில் கைச்சாத்திடாததன் காரணமாக நாம் இலங்­கையை பாது­காத்து வரு­கின்றோம். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ர­ணைக்கு கோரிக்கை விடுத்­தாரே ஒழிய நாம் ஒரு சந்­தர்ப்­பத்­திலும் ஜெனீவா சென்று அவ்­வா­றா­ன­தொரு கோரிக்­கையை விடுக்­க­வில்லை.

நாம் வெளி­நா­டு­களில் முத­லீட்டு உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­கின்றோம். பொரு­ளா­தார ஆலோ­ச­னை­களை பெறு­கின்றோம். அதே­போன்று நீதித்­துறை சார் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­று­வ­ரு­கின்றோம். எனினும் எமது நீதித்­து­றையின் இறை­மைக்குள் வெளி­நா­டுகள் தலை­யீடு செய்­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

உலக நாடுகள் தற்­போது இலங்­கையை ஏற்றுக் கொண்­டுள்­ள­தோடு அழைப்­பு­களும் வரு­கின்­றன. நாமும் உல­கோடு கைகோர்த்து பய­ணித்­தாலே அபி­வி­ருத்­தி­களைக் காண­மு­டியும்.

இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையே பாரிய பிரச்­சினை இருந்து வரு­கின்ற போதிலும் இந்­தியப் பிர­த­மரும் பாக். பிர­த­மரும் சினே­க­பூர்­வ­மான உற­வினை பேணி வரு­கின்­றனர்.

அதே­போன்று தான் இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கு மிடையில் பாரிய போட்டித் தன்மை ஒன்று நிலவி வரு­கின்ற போதிலும் ஆந்­தி­ர­ மா­நி­லத்தில் சீனா­வுக்கு 10 ஆயிரம் ஏக்கர் காணியை இந்­தியா வழங்­கி­யி­ருக்­கின்­றது. இவ்­வாறு தான் வெளி­நா­டு­களின் உற­வுகள் பேணப்­பட்டு வரு­கின்­றன.

இன்று ஞான சார தேரர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். ஊட­க­வி­ய­லாளர் பிரகித் எக்­னெலி கொடவின் மனை­வியை மிரட்­டிய குற்­றத்­துக்­கா­கவே நீதி­மன்­றத்­தினால் அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். ஞான­சார தேரர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­மை­யா­னது நீதித்­துறை விவ­கா­ர­மாகும். இதற்கும் எமக்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது.

ஞான­சார தேரர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து நீதி­மன்ற வளா­கத்தில் காவி உடை­ய­ணிந்­த­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். அது­மாத்­தி­ர­மின்றி நீதி­மன்­றத்­துக்குள் அத்­து­மீறி நுழை­வ­தற்கும் முற்­பட்­டுள்­ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பௌத்தர்கள் என்ற வகையில் நாம் வெட்கமடைகிறோம். அத்துடன் வேதனையும் அடைகிறோம்.

ஞானசார தேரரின் கைது, விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை மா நாயக்கருக்கு அனுப்பிவைக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

அத்துடன் போலித் தேரர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51