வயோதிப மதகுருமார்களுக்கான காப்புறுதி திட்டம் விரைவில்

Published By: Digital Desk 7

13 Sep, 2017 | 03:36 PM
image

இலங்கையிலுள்ள அனைத்து வயோதிப மத குருமார்களுக்கும் நல்லாட்சியின் கீழ் காப்புறுதித் திட்டத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பௌத்த அறிஞர் சபைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கமையவே குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது தர்மாச்சாரியார் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான நியமனம், வெளிநாடுகளில் இருந்து பௌத்த உயர் கல்விக்காக நாட்டினுள் வரும் பௌத்த பிக்குமார்களுக்கு சலுகைகள் வழங்குதல் மற்றும் விகாரைகளில் எஞ்சியிருக்கும் ஓலைச்சுவடிகளை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானங்கள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் கல்வி வாய்ப்புகளை விரிவாக்கும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய பௌத்த அறிஞர் சபை பிக்குமார் உள்ளிட்ட பௌத்த பிக்குமாரை உள்ளடக்கிய  குழுவை உருவாக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

இவ் பௌத்த அறிஞர் சபை கூட்டத்தில் தேசிய பௌத்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் வண கொட்டப்பிற்றியே ராகுல தேரர் பேராசிரியர் வண கல்லேல்லே சுமணசிறி தேரர் கலாநிதி வண அக்குரற்றியே நந்த தேரர் உள்ளிட்ட தேரர்களும் பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் சந்திரபிரம கமகே உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32