எதிர்வரும் 20 ஆம் திகதிவரை  மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமாக விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பிர­தான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் இன்று நண்­பகல் 12 மணி முதல் 48 மணித்­தி­யால பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்திருந்தார்.

இதேவேளை,  பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­படும் 48 மணி நேரத்­துக்குள் தமது  கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் முறை­யான தீர்­வொன்றை பெற்­றுத்­த­ரா­விட்டால் எதிர்­வரும் 15ஆம் திகதி நண்­பகல் 12 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்­துக்கு செல்வோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே  எதிர்வரும் 20 ஆம் திகதிவரை  மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.